ரெயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை
1 min read
Carrying firecrackers on a train can lead to 3 years in prison
25.10.2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே மற்றும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயிலில் பட்டாசு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்றால், ரயில்வே சட்டம் 164-ன் படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆகியவை எச்சரித்துள்ளன.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்களும் ரயில் பயணிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.