October 27, 2026

Seithi Saral

Tamil News Channel

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

1 min read


Chief Minister Vijay inspects Chembarambakkam Lake

26.10.2026
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 14.76 அடியாக உள்ளடு. ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்பதால் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து வெளியேற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 150 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வரும் நீரின் அளவு, சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு மற்றும் நீர்பிடிப்பு பகுடிகளில் ஏற்படும் நீரோட்டடதடை பொறுத்து மாறுபடக்கூடும் எனவே மழை அதிகமாக பெய்தால் ஏரியின் நீர் மட்டம் திடீரென உயரக்கூடும் என்று மத்திய நீர் வள ஆணையம் அலர்ட் செய்துள்ளது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அவருக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியின் நிலவரம் குறித்து விரிவான தகவல்களை தெரிவித்தனர்.

இன்று பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 150 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏரியிலிருந்து வினாடிக்கு 208 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதில், சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக 176 கன அடி தண்ணீரும் சிப்காட் தேவைக்காக 5 கன அடியும் பாசனத்திற்காக 2 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில்கடந்த 24 மணி நேரக்கணக்கீட்டின்படி 4.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு 1,488 மில்லியன் கன அடி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண், 19 கண் மதகுகள் பகுதியில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, நீர்வரத்து, மழையை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் உபரிநீர் திறப்பு குறித்து முன்கூட்டியே அறிவிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர்விஜய் அறிவுறுத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *