ரெயில் நிலைய கவுண்டர் எடுக்கம் ரெயில் டிக்கெட்டுக்கு பயணக் காப்பீடு- நாளை முதல் தொடக்கம்
1 min read
Travel insurance for train tickets purchased at railway station counters – to begin from tomorrow
26.10.2026
நாளை முதல் ரெயில் நிலைய கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் விருப்ப பயணக் காப்பீடு திட்டம் அமலுக்கு வருகிறது என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை ஆன்லைனில் (IRCTC இணையதளம்/செயலி) டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, இனி கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விபத்துகள் நேர்ந்தால், இந்த காப்பீட்டின் மூலம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். விபத்தில் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.10 லட்சமும், பகுதி நேர ஊனத்திற்கு ரூ.7.50 லட்சமும், காயங்களுக்கான மருத்துவ செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வரையும் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
இந்த காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை வெறும் 45 பைசா மட்டுமே. ஆனால், இதற்கான பிரீமிய தொகையை நீங்கள் ரொக்கமாக கவுண்டரில் செலுத்த முடியாது. சில்லறை நாணய புழக்க பற்றாக்குறை காரணமாக, இந்த காப்பீட்டை தேர்ந்தெடுக்கும் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் பிரீமியம் முழுவதையும் ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என ரெயில்வே வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கவுண்டரில் முன்பதிவு படிவத்தை நிரப்பும்போது உங்களுக்கான விருப்ப காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும் (இது கட்டாயமல்ல, பயணிகளின் தனிப்பட்ட விருப்பம்).
உங்களது சரியான மொபைல் எண்ணை படிவத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம்.