உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்: அண்ணாமலை பேச்சு
1 min read
Youth should participate in large numbers in local body elections: Annamalai’s remarks
26.10.2026
கரூர் மாவட்டம் பெரிய தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. நிறைவு நாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:-
“உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். தனி மனிதனை அடையாளப்படுத்தாமல் பிரச்சினையை அடையாளப்படுத்தினால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும். இளைஞர்கள் தங்கள் கிராம பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் 22 லட்சம் பேர் உள்ளனர். அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்றால் தான் உள்ளாட்சி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். ராஜீவ்காந்தி, மோடி ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளனர். கேரளா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தான் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.