October 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்

1 min read

Tenkasi District Development Coordination and Monitoring Committee Meeting

27.10.2026

தென்காசி மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்

தென்காசி எம்.பி  மரு.ராணி ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ,கலெக்டர் எஸ்.பி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 27.10.2026 மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் (DISHA), குழு தலைவர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் (DISHA), குழு தலைவர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் -மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் குறித்தும். தூய்மை பாரத இயக்கம்-கிரமின்  குறித்தும், ஜல் ஜீவன் இயக்கம் குறித்தும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் குறித்தும், 15வது நிதிக்குழு மானியம் குறித்தும்,

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்,

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டம் குறித்தும்,

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்,

வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்தும், பயிறு வகைகள் உற்பத்தியில் தற்சார்புக்கான இயக்கம் குறித்தும்,தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்-மக்காச்சோளம் குறித்தும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம்  ஆகியவை குறித்தும்,

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வேளாண் வணிகம் துறை சார்பில் செயல்படுத்தப்படும் உலர்களத்துடன் கூடிய தரம்பிரிப்புக் கூடம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், தோட்டக்கலைத் துறையின் மூலம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் குறித்தும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டம் குறித்தும், மானாவாரி நில மேம்பாட்டு திட்டம் குறித்தும்,

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் 15 ஆம் நிதிக்குழு 2025-2026 குறித்தும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் குறித்தும், கவனம் சார்ந்த வட்டார வளர்ச்சி திட்டம் ஆகியவை குறித்தும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மூலம் செயல்படுத்தப்டும் திட்டம் குறித்தும்,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்(ICDS) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்,

புவியியல் மற்றும் சுரங்கத்துறை எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், தொழில் வணிகத் துறை மூலம் செயல்படுத்தப்டும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிநுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்  குறித்தும்,

சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மதிய உண குறித்தும் முதலமைச்சர் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்தும், பெண் குழந்தைகளைக் காப்பகம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  திட்டம் குறித்தும், திருமண நிதியுதவி திட்டங்கள் குறித்தும், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்தும்,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் சில்க் சமக்ரா திட்டம் குறித்தும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம். திருநெல்வேலி சார்பில் செயல்படுத்தப்படும் மறு சீரமைக்கப்பட்ட விநியோகத் திட்டம் குறித்தும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருநெல்வேலி கோட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டம்  குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டம் மற்றும் பராமரிப்பு கோட்டம் தென்காசி சார்பில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குறித்தும், தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்,

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II குறித்தும், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் குறித்தும்,

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தென்காசி சார்பில் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கோட்டம் சார்பில் பின்னர், நீர்வளத்துறை, சிற்றாறு வடிநில செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நீர்வளத்துறை, மேல்வைப்பாறு வடிநில கோட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் குறித்தும், உஜ்வான் திட்டம் குறித்தும்,

பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்தும்,  திட்டம் குறித்தும்,

பொதுப்பணித்துறை கட்டட (க(ம)ப) கோட்டம் தென்காசி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்தும் நபார்டு  திட்டம் குறித்தும்,

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், தென்காசி வனக்கோட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் பசுமை தமிழக இயக்கம்  குறித்தும் அகஸ்தியர்மலை உயிர்கோள காப்பகம் திட்டம் குறித்தும், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் குறித்தும், தமிழ்நாடு ஈடுசெய்யும் காடு வளர்ப்பு திட்டம்  குறித்தும்,

கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மாவட்ட திறன் பயிற்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் குழு தலைவர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி டாக்டர் கலைகதிரவன,  வாசுதேவநல்லூர் வழக்கறிஞர் ஈ.ராஜா, கடையநல்லூர் வழக்கறிஞர் தி.மு.ராஜேந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.அசோக்குமார், மாவட்ட வன அலுவலர்முனைவர்.

ரா.ராஜ் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைமுனைவர்.ஆ.ரா.

சிவராமன், திட்ட இயக்குநர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மரு.தண்டபாணி, மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Download

Add to Drive

Save to Photos

ReplyReply all

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *