October 29, 2026

Seithi Saral

Tamil News Channel

பலுசிஸ்தான் தாக்குதல்- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 80 பேர் பலி

1 min read

Balochistan attack – 80 Pakistani military personnel killed

28.10.2026
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான் பகுதி, தனி நாடு கோரிக்கையை முன்வைத்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தளங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது பலுசிஸ்தான் போராளிகள் குழு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ‘ஆபரேஷன் அல்மாஸ்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் போராளிகள் குழு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள முழானி காவல் நிலையம் மீது, சமீபத்தில் பலுசிஸ்தான் போராளிகள் குழு நடத்திய தாக்குதலில், ராணுவ புலனாய்வு கேப்டன் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் குப்து பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில், ஒரு ராணுவ வாகனத்தை அழித்ததாகவும் பலுசிஸ்தான் போராளிகள் குழு தெரிவித்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

இந்த நிலையில், ஆபரேஷன் அல்மாஸ் நடவடிக்கை மூலம் 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பலுசிஸ்தான் செய்தி தொடர்பாளர் மேஜர் குவாஹ்ராம் பலோச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆபரேஷன் அல்மால் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில், 12 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டு, இரண்டு காவல் நிலையங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இந்த தாக்குதலில் குவாதர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துடன் தொடர்புடைய ராணுவ தளங்கள் மற்றும் பொருளாதார திட்டங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப் போவதாக பலுசிஸ்தான் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *