October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

வானுார் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகளை கொன்ற தந்தை

1 min read

Father kills daughter near Vanur after she refuses to give up her relationship

30.10.2026

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த வி.பரங்கனி கே.எஸ்.ஆர்., நகரை சேர்ந்த சிவசாத்திரி டிப்பர் டிரைவரான பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 16 வயதில் சிவமகி, 14 வயதில் விகாஷினி என்ற இரு மகள் உள்ளனர்.
இதில் விகாஷினியை, தாய் விமலா ராணிப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.
அப்போது, விகாஷினி, அதே கிராமத்தை சேர்ந்த ஜீவா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததால், விகாஷினியை பெற்றோர் கண்டித்ததோடு, விமலா தனது மகளை அங்கிருந்து வி.பரங்கனி கிராமத்திற்கு அழைத்து வந்து கணவருடன் வசித்து வந்தார்.
கடந்த மூன்று மாதங்களாக வானுார் அடுத்த கரசானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த விகாஷினி மீண்டும் தனது காதலன் ஜீவாவுடன் மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் பலமுறை கண்டித்து பார்த்துள்ளனர்.
ஆனால் அவர் பெற்றோரின் பேச்சை கேட்காமல், தொடர்ந்து ஜீவாவிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் விமலா, வேலுாருக்கு ஒரு துக்க நிழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது இரவு விகாஷினி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
தனது மகள் காதலை கைவிட மறுத்ததால், அவர் மீது ஆத்திரத்தில் இருந்த அவரது தந்தை சிவசாத்திரி, தூங்கிக் கொண்டிருந்த விகாஷினியை கழுத்தை நெரித்து விட்டு, தனது சகோதரரான சசிக்குமார் என்பவருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு வந்து பார்த்த போது, மயக்க நிலையில் இருந்த விகாஷினியை மீட்டு, வானுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகளை கொலை செய்து விட்டு வீட்டிலேயே இருந்த சிவசாத்திரியை வானுார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிட மறுத்த 14 வயது மகளை தந்தையே கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூர சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *