October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக சுந்தரவேல் பொறுப்பேற்பு

1 min read

Sundaravel takes charge as the new Executive Officer of Keelapavoor Town Panchayat

30.10.2026
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக சென்னையை சேர்ந்த சுந்தரவேல் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

கீழப்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக
ஜா.மாணிக்கராஜ் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் குற்றாலம் பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் கீழப்பாவூர் பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராக ஜா.மாணிக்கராஜ் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த சுந்தரவேல் கிழப்பயூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன்பு இவர் சென்னை பேரூராட்சிகள் இயக்ககம், செயல் அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று
கீழப்பாவூர் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக சுந்தர வலு பொறுப்பேற்றுக் கொண்டார்.

கீழப்பாவூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலர் சுந்தரவேலுவிற்கு முன்னாள் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *