டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல்நிலை தேர்வில் 92,595 பேர் ‘ஆப்சென்ட்’
1 min read
92,595 candidates ‘absent’ for TNPSC Group 2 preliminary examination
1.11.2026
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ, முதல் நிலைத்தேர்வை, 92,595 பேர் எழுதவில்லை.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப்–1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் –4 தேர்வுகள்
தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், குரூப் –2, 2ஏ தேர்வு வழியே, துணை வணிக ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை – 2, தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட, 846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட், 11ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு, 4 லட்சத்து 89,885 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு, தமிழகம் முழுதும், 1,647 மையங்களில், நேற்று நடந்தது. தேர்வர்கள் காலை 8:30 மணி முதலே, தேர்வறைக்கு வருகை தர தொடங்கினர். தேர்வு சரியாக, 9:30 மணிக்கு தொடங்கியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு பகல், 12:30 மணி வரை நடந்தது.
தேர்வுக்கு, 4 லட்சத்து 89,885 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3 லட்சத்து 97,290 பேர் மட்டுமே எழுதினர். 92,595 பேர் அதாவது, 19 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.