தென்காசி மாவட்ட விவசாயிகள் நெல்பயிர்களை காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min read
Collector advises farmers in Tenkasi district to insure their paddy crops
2.11.2026
தென்காசி மாவட்டத்தில் எதிர்பாராத இயற்கை பேரிடர்கள் வந்தால் அவற்றில் இருந்து விவசாயிகளுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தோடு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. நடப்பு பிசானம் பருவத்தில் தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை எஸ்.பி.ஐ பொது காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது. அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நெல் விதைப்பு அல்லது நெல் நடவு செய்யும் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.558.75/- மட்டும் செலுத்தி இத்திட்டத்தில் பதிவு செய்யலாம்.
தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதியின் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மோனிகா ராணா, கேட்டுக்கொண்டுள்ளார்.