November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தீபாவளியையொட்டி தமிழகத்தில் முன்பதிவு இல்லா 5 சிறப்பு ரெயில்கள்

1 min read

5 unreserved special trains in Tamil Nadu for Diwali

4.11.2026
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே சார்பில் 5 முன்பதிவில்லா சிறப்பு (MEMU) ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அவை விவரம் வருமாற:-

  1. சென்னை எழும்பூர் – திருச்சி (ரயில் எண்: 06191 – ஒருவழி சிறப்பு ரயில்)
    இது நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும். மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
  2. திருச்சி – தாம்பரம் (ரயில் எண்: 06192 – ஒருவழி சிறப்பு ரயில்). இது நவம்பர் 7 (சனிக்கிழமை) காலை 5.50 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும்.
    அதே நாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
  3. சென்னை எழும்பூர் – திருச்சி (ரயில் எண்: 06193)
    • இது நவம்பர் 7 (சனிக்கிழமை) இரவு 7.00 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும்.
    மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
  4. திருச்சி – சென்னை எழும்பூர் (ரயில் எண்: 06194 – மறுமார்க்கம்)
    இது நவம்பர் 9 (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும்.
    மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
  5. தாம்பரம் – மானாமதுரை / மானாமதுரை – தாம்பரம் சிறப்பு ரயில்கள் (ரயில் எண்கள்: 06161 / 06162)
    தாம்பரம் – மானாமதுரை (06161): இது நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரை செல்லும். மானாமதுரை – தாம்பரம் (06162): நவம்பர் 7 (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் புறப்பட்டு அதே நாள் பிற்பகல் 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா மெமு ரயில்களாக இயக்கப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *