தென்காசியில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம்
1 min read
Official Language Workshop for Government Officials and Staff in Tenkasi
4.11.2026
தென்காசி மாவட்டம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.
இது கறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு 2026 – 27ஆம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 17.11.2026 (செவ்வாய் கிழமை). 18.11.2026 (புதன் கிழமை) ஆகிய இரண்டு நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தென்காசி, இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பபள்ளி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இப்பயிலரங்கில் தமிழ் வளர்ச்சி இயக்குநர். மாவட்ட ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள். தமிழறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வுள்ளனர்.
பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு ஆட்சிமொழி வரலாறு / சட்டம். அலுவலகக் குறிப்புகள், வரைவுகள். செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம் / அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.
மேலும் இப்பயிலரங்கம் கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலர் நிலையில் அலுவலர் (அ) கண்காணிப்பாளர் ஒருவரும், பணியாளர் நிலையில் உதவியாளர் (அ) இளநிலை உதவியாளர் (அ) தட்டச்சர் ஒருவருமாக மொத்தம் இருவர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.