November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் அரசு குழந்தைகள் காப்பக குழந்தைகளுக்கு பட்டாசு

1 min read

Fireworks for children at Virudhunagar Government Children’s Home

4.11.2026
விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரண்யா அறி விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று(04.11.2026) குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

குழந்தைகள் அனைவரும் நன்றாகக் கல்வி கற்று, தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வில் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையின் எந்த ஒரு பிரச்சனைக்கும் கல்வியால் சிறந்த தீர்வை காண முடியும்.
குழந்தைகள் தங்களுக்குள் அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல், தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைவரும் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, ஒழுக்கத்துடன் வாழ்ந்து, சமூகத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக வேண்டும்.
எதிர்காலம் மட்டுமே நம் கைகளில் உள்ளது. எனவே, கடந்த காலங்களைப் பற்றி கவலைப்படாமல் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வருவதற்கான இலக்கை நிர்ணயித்து குறிக்கோளோடு செயல்பட வேண்டும்.

குழந்தைகள் அனைவரும் தீப ஒளியைப் போன்று தங்களது வாழ்க்கையிலும் கல்வி, அறிவு, திறமை மற்றும் நற்பண்புகளால் பிரகாசிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட குழந்தை நல அலுவலர் மீனாட்சி, ஆசிரியர்கள், காப்பாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *