November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட புதிய எஸ்பி-யாக டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்பு

1 min read

Dr. R. Stalin, IPS, takes charge as the new Superintendent of Police (SP) for Tenkasi district

4.11.2026
தென்காசி மாவட்டத்தின் 10-வது காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இங்கு எஸ்பி-யாகப் பணியாற்றிய அசோக்குமார் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஸ்டாலின், இதற்கு முன்பு சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுமார் 20 மாதங்கள் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் கும்பல், ரவுடிசம் மற்றும் கேரளாவுக்குக் கடத்தப்படும் கனிம வள மாஃபியாக்கள் மீது இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய எஸ்பி-யாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்டத்தின் பிற உயர் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துதெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *