காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தந்தால் ரூ.1 லட்சம்- இளம்பெண் அறிவிப்பு
1 min read
Rs. 1 lakh reward offered by young woman for finding her lost parrot
4/11/2026
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அடுத்த சேவாசி பகுதியில், ஆறு வயது காங்கோ ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த சாம்பல் நிற ஆண் கிளி ஒன்றை ஜெசிகா என்ற இளம்பெண் வளர்த்து வந்தார்.
இவர் தனது கிளிக்கு ‘லட்டு’ என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். மேலும் இந்த கிளி இரவு நேரத்தில் மட்டும் கூண்டில் அடைக்கப்பட்டு, மற்ற நேரத்தில் கூண்டுக்குள் அடைபடாமல் சுதந்திரமாக சுற்றிவந்துள்ளது.
இதையடுத்து ஒரு நாள் காலை ஜெசிகா தனது கிளியை கூண்டில் இருந்து வெளியே திறந்தபோது, அந்த கிளியானது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து மாலை நேரமாகியும் தனது கிளி வீடு திரும்பாததால், ஜெசிகாவிற்கு கவலை எழுந்துள்ளது. தனது கிளியால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை தான் பறக்க முடியும் என்பதால், அவர் தனது கிளியை அக்கம்பக்கத்தில் முதலில் தேடி பார்த்துள்ளார்.
இதையடுத்து தனது கிளி எங்கு தேடியும் கிடைக்காததால், தனது கிளியை கண்டுபிடித்து தருமாறு வனத்துறையின் உதவியை ஜெசிகா நாடினார்.
தனது சாம்பல் நிற கிளி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் தரப்படும் எனவும் ஜெசிகா சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து ஜெசிகாவை தொடர்புகொண்ட நபர்கள், தங்களது கிளிக்கு பதிலாக வேறு கிளியை தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால் ஜெசிகா, தான் அதனை குழந்தையை போல வளர்த்ததாகவும், தனக்கு தனது கிளி தான் மீண்டும் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தொலைந்து போன தனது கிளி குறித்து சமூக வலைதளத்தில் ஜெசிகா கூறியிருப்பதாவது:-
“அவனுக்கு அதிகமான சத்தம் பிடிக்காது. அவன் வீட்டில் இருக்கும்போது அமைதியையே விரும்புவான். எனது வீட்டிற்கு உறவினர்கள் யாராவது வந்தால், அவன் சிலையை போல பேசாமல் அமைதியாகிவிடுவான். மேலும் தற்போது தீபாவளி நெருங்கி வருவதால், அந்த சத்தத்தை அவனால் சகித்து கொள்ளவே முடியாது. அவன் பட்டாசு சத்தத்திற்கு பயந்து போய்தான், எங்கேயோ பதுங்கி உள்ளான். அவனை யாராவது பார்த்தால் தயவுசெய்து எனக்கு தகவல் தெரிவியுங்கள்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாலை நேரமாகியும் தனது கிளி வீடு திரும்பாததால், ஜெசிகாவிற்கு கவலை எழுந்துள்ளது.
தனது கிளியால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை தான் பறக்க முடியும் என்பதால், அவர் தனது கிளியை அக்கம்பக்கத்தில் முதலில் தேடி பார்த்துள்ளார்.
இதையடுத்து தனது கிளி எங்கு தேடியும் கிடைக்காததால், தனது கிளியை கண்டுபிடித்து தருமாறு வனத்துறையின் உதவியை ஜெசிகா நாடினார்.
தனது சாம்பல் நிற கிளி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் தரப்படும் எனவும் ஜெசிகா சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து ஜெசிகாவை தொடர்புகொண்ட நபர்கள், தங்களது கிளிக்கு பதிலாக வேறு கிளியை தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால் ஜெசிகா, தான் அதனை குழந்தையை போல வளர்த்ததாகவும், தனக்கு தனது கிளி தான் மீண்டும் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.