சிஜேபி கட்சிக்கு வெளிநாட்டு நிதி- ஆதாரங்கள் இருப்பதாக மத்திய மந்திரி பேட்டி
1 min read
Union Minister’s interview: CJP party has foreign funding and sources
4.11.2026
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் பெங்களூ ருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் அபிஜீத் திப்கே, சவுரவ்தாஸ் போன் றோருக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்கிறது, தேச விரோத தொண்டு நிறுவ னங்கள் மூலம் அந்த நிதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த தேசிய விரோத தொண்டு நிறுவனங் கள் மற்றும் பிற நிறுவனங்கள் இந்தியாவுக்குள்ளும், நாட்டுக்கு வெளியேயும் இயங்கி வருகின்றன. தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்து கொண்டவர்களுக்கு வெளிநாடு களில் இருந்து நிதி வருகிறது. அபிஜீத் திப்கே அமெரிக்காவை சேர்ந்த நன்கொ டையாளரிடம் இருந்து நிதி பெறுகிறார். அசுதோஷ் ரங்காவுக்கு பாகிஸ்தான் அர சியல்வாதியிடம் இருந்து நிதி வருகிறது. எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெண் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வெளி நாட்டு நிதி பெற்றுள்ளார்.
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. இவ்வாறு குற்றச்சாட்டு கூறுபவர்கள் நம்பகத்தன்மை இழந்தவர்கள். அவர்களின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அவர்கள் தவ றான கட்டுக்கதைகளை உற்பத்தி செய்கிறார்கள். அதனால் அவர்கள் மக்களி டையே நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.எதிர்க்கட்சிகள் தேர்வு முறைகேடு குறித்து குறிப்பிட்ட மாநிலங்களை தேர்வு செய்து போராடுகின்றன. முன்பு கல்வி குறித்து பிரச்சினை கிளப்பினர். இப் போது டெல்லியில் போராடுகிறார்கள். பஞ்சாப், கர்நாடகத்தில் நடைபெறும் தேர்வு முறைகேடுகளை பற்றி அவர்கள் பேசுவது இல்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனைத்தும் நன்றாக இருக்கிறதா?.
கர்நாடகத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்தபோது இங்குள்ள கல்வி மந்திரி ஏன் ராஜினாமா செய்யவில்லை?. பஞ்சாப்பில் வினாத்தாள் கசியவில்லையா?. மக் களை நீண்ட காலத்துக்கு முட்டாளாக்க முடியாது. கர்நாடகத்தில் நடைபெறும் தேர்வு முறைகேடுகளை மக்களிடையே கொண்டு செல்வோம். மத்திய அரசை இலக்காக கொண்டு தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. நாட்டில் இதுவரை 12 முறை எஸ்.ஐ.ஆர். பணி கள் நடைபெற்று உள்ளன. இதில் 10 முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்றது. எங்களுடைய ஆட்சியில் 2 முறை மட்டுமே நடந்துள்ளது.
இடம் மாறியவர்கள், இறந்தவர்கள், 2 இடங்களில் இடம் பெற்று உள்ளவர்களின் பெயர்களை நீக்க வேண்டியது அவசியம். அதை தான் தேர்தல் கமிஷன் செய் கிறது. 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருப்பதாக சொல்கிறார் கள். இதில் 6.03 கோடி பேர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள். 2.80 கோடி பேர் இறந்தவர்கள். 3 கோடி பேரை கண்டுபிடிக்க முடியவில்லை.கர்நாடகத்தில் மட்டுமே 7.10 லட்சம் போலி வாக்காளர்கள், 24.17 லட்சம் வாக்கா ளர்கள் இறந்தவர்கள். இதை தான் தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. இதன் மூலம் தேர்தல் கமிஷன் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணி களை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. கர்நாடகத்தில் இந்த பணிகள் சரியாக நடந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த பணிகள் நடந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களில் இந்த பணிகள் தவறு என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.