சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டம்
1 min read
Central Government Scholarship Scheme for Students from Denotified Tribes
6.11.2026
தென்காசி மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டம் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, கூறியதாவது:-
ஒன்றிய அரசால் இதர பிறபடுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI OBC, EBC & DNT மாணவர்களுக்கான பள்ளிகளில் உயர்தர கல்வி) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (தேசிய கல்வி உதவித்தொகை போர்டல்) அறிவிக்கப்பட்டுள்ளது (உயர்தர பள்ளி) சிறந்த கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ளது) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ /மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதியது) திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9, 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11 -12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக அரசால் வழங்கப்படும். 30% மாணவர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2026.
கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாக்க கடைசி நாள்: 15.12.2026.
நிபந்தனைகள்
மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2025-26 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள். தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளம் (https://scholarships.gov.in) தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.
மேற்படி, OTR Number பயன்படுத்தி 2026-27 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள், தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல் அலுவலர்களை தொடர்பு கொண்டு பெறலாம். மேலும், https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.)
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா. தெரிவித்துள்ளார்.