கல்லூரி நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்கள்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min read
10,000 books for college libraries – M.K. Stalin presents them
5.11.2026
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்கள், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்கள், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000 புத்தகங்கள் என மொத்தம் 10,000 புத்தகங்களை மு.க.ஸ்டாலின், இன்று (05-11-2026), காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தனக்கு வரப்பெற்ற புத்தகங்களில் இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் புத்தகங்களை பல்வேறு கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.