தென்காசியில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு-அமைச்சர் வி.கே.ராஜீவ் துவக்கி வைத்தார்
1 min read
Minister V.K. Rajeev inaugurates ‘Vetri Special Vegetable Pack’ in Tenkasi
5.11.2026
தென்காசி மாவட்டம் “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (05.11.2026) நடைபெற்ற அரசு விழாவில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்/ தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு 10 வகையான காய்கறிகள் ரூ.100க்கு விற்பனையை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
நுகர்வோர்க்கு அன்றாட தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் கிடைக்க செய்யும் நோக்கில், 10 காய்கறிகள் அடங்கிய ஒருங்கிணைந்த வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு காய்கறிகள் தொகுப்பில் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம். கத்தரிக்காய் 250 கிராம். உருளைக்கிழங்கு 250 கிராம். கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம். பச்சை மிளகாய் 100 கிராம். எலுமிச்சை 100 கிராம். இஞ்சி 50 கிராம். தேங்காய் 400-500 கிராம் என மொத்தம் 10 காய்கறிகள் இருக்கும். பொருட்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்பட மாட்டாது. ஒரு தொகுப்பின் விற்பனை விலை ரூ.100 மட்டும் ஆகும்.
தரமான பொருள்கள் சரியான நிலையில் நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வெளிச்சந்தையின் விலையை விட குறைவான விலையில் வழங்கவும். கூட்டுறவுத் துறை அலுவலர்களால் விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது.
தென்காசி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சுய சேவை பிரிவு, கடையநல்லூர் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் சுய சேவை பிரிவு, சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் சுய சேவை பிரிவு மற்றும் சிவகிரி கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் சுய சேவை பிரிவு ஆகியவற்றில் இந்த ஒருங்கிணைந்த சிறப்பு காய்கறிகள் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. நுகர்வோர்கள் தங்கள் அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்த காய்கறிகள் தொகுப்பை பெற்று பயனடையலாம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி. திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் டாக்டர் ஆர்.தண்டபாணி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கு.நரசிம்மன். கூட்டுறவு அலவலர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.