November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தீபாவளி வழிபாட்டு நேரம்

1 min read

Diwali Worship Time

5.11.2026
தீபாவளி அன்று அதிகாலையில் (சூரிய உதயத்திற்கு முன்) நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது ‘கங்கா ஸ்நானம்’ எனக் கருதப்படுகிறது.

அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை (சூரிய உதயத்திற்கு முன்பாக)
குளிக்க வேண்டும்.
நல்லெண்ணெயில் லேசாகச் சூடேற்றி, சீரகம், மிளகு அல்லது இஞ்சி சேர்த்துத் தலையில் தேய்த்துக் குளிப்பது மரபு.

அன்று காலை
குளித்து முடித்து புத்தாடை அணிந்து, வீட்டில் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்று காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை வழிபாட்டுக்கு உகந்த நேரம். அதை விட்டால் காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரையும் பூஜிக்கலாம்.

தீபாவளி மாலையில் மகாலட்சுமி மற்றும் குபேர பூஜை செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

லட்சுமி பூஜை செய்ய (பிரதோஷ காலம்): மாலை 6:05 மணி முதல் இரவு 8:10 மணி வரை

மாலை நல்ல நேரம். பிற்பகல் 3:15 மணி முதல் 4:15 மணி வரை வழிபாடு நடத்தலாம்.
அன்று
ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.

எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை இந்த நேரத்தை பூஜைக்கு தவிர்ப்பது நல்லது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *