விருதுநகர் மாவட்டத்தில் 43.90 மெ.டன் பட்டாசு கழிவுகள்- ஆட்சியர் தகவல்
1 min read
43.90 metric tonnes of firecracker waste in Virudhunagar district – Collector’s information
9.10.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களால் உருவாக்கப்பட்ட குப்பைக் கழிவுகளை அகற்றும் வகையில் சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளில் சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, 09.11.2026 அன்று மாவட்டத்தில் உள்ள மொத்தம் 227.57 டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதில், தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் உருவான 43.90 டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் 23.70 மெ.டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், விருதுநகர் நகராட்சியில் 6 மெ.டன், இராஜபாளையம் நகராட்சியில் 2.5 மெ.டன்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 4.00 மெ.டன், அருப்புக்கோட்டை நகராட்சியில் 4.70 மெ.டன், சாத்தூர் நகராட்சியில் 3.00 மெ.டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகளில் ஈரக்கழிவுகள் 89.00 மெ.டன், உலர்க் கழிவுகள் 88.70 மெ.டன், அபாயகரமான கழிவுகள் 2.05 மெ.டன், சிறப்புப் பராமரிப்புக் கழிவுகள் 3.92 மெ.டன் மற்றும் தீபாவளிப் பட்டாசுக் கழிவுகள் 43.90 டன் என மொத்தம் 227.57 டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகையின்போது உருவாகும் குப்பைக் கழிவுகளை அகற்றி, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.