குற்றாலம் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை
1 min read
Request to expedite renovation works at the Courtallam temple
9.11.2026
குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அமைச்சருக்கு, அறங்காவலர் குழு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, தென்காசி மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திமுருகேசன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில் ரத வீதிகளில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏலம் நடத்துவதற்கு ஏற்பட்ட இடையூறுகளை, தனது கோரிக்கையை ஏற்று களைந்து ஏலமிட நடவடிக்கை எடுத்தமைக்கும், இதன் மூலம் ரூபாய் 71 லட்சம் வருமானம் கிடைக்க செய்தமைக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் பக்தர்கள் தங்கும் விடுதி ஏலத்தை விரைந்து நடத்திட ஆவண செய்ய வேண்டும். இதே நீண்ட நாட்களாக தடைபட்டுள்ள சித்திரசபை திருப்பணியை நடத்திடவும், உப கோவில்களான வன்னியப்பர், நரசிங்கநாதர் கோவில்களின் திருப்பணியுடன், குற்றாலநாதர் கோவிலின் திருப்பணிகளையும் விரைந்து முடித்திட இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கு சிறப்பு அறிவுறுத்தல் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.