கோவில் கொடை விழா நிகழ்ச்சிகள் இரவு 12 மணிவரை நடத்த அனுமதிக்க கோரிக்கை
1 min read
Request to allow temple festival events to continue until 12 midnight
9.11.2026
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திரைப்படங்கள் திரையிடுவதற்கு 1957 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அதன் விதிகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி விடுமுறை நாட்களில் மற்றும் புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்து ஒரு வார காலத்திற்கு
காலை 6 மணி முதல் மறுநாள் காலை 2:30 மணி வரையிலும் திரைப்படங்களை திரையிடலாம் என்று விதிகளை தளர்த்தி திரைப்படங்கள் திரையிடுவதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதை போல தென் மாவட்டங்களில் குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கோவில் கொடை விழா காலங்களில் நள்ளிரவு 12 மணி வரையிலும் கலை நிகழ்ச்சிகள் இசை கச்சேரிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்
மேலும் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒலி மாசு கட்டுப்பாடு விதிகள் (2000) இதில் தமிழக அரசு சில தளர்வுகளை திருத்தங்களை கொண்டு வந்து நள்ளிரவு 12 மணி வரையிலும் இசை கச்சேரிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்
1957 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திரையரங்குகள் ஒழுங்குமுறை விதியல் திருத்தம் செய்து தற்போது காலை 6:00 மணி தொடங்கி மறுநாள் காலை 2:30 மணி வரையிலும் தொடர்ந்து திரையரங்குகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்த அனுமதி வழங்கியதை போல தமிழக அரசு
1986 ஆம் ஆண்டு ஒலி மாசு கட்டுப்பாடு விதிகள் (2000) இதில் சொல்லப்பட்டுள்ளது அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில சமய சமுதாய மொழி கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு விதிகளில் சிலதளர்வுகளை ஏற்படுத்தி இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதனால் 1986 ஆம் ஆண்டு ஒலி மாசு கட்டுப்பாடு விதிகள் (2000) இதில் தமிழக அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கோவிலில் கொடை விழா திருவிழாக்களில் பாட்டுக் கச்சேரிகள் மேடை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் நள்ளிரவு 12 மணி வரையிலும் நடத்துவதற்கு தழிழக அரசு விதிகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி அறிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்