கடையநல்லூர் அரசு கல்லூரியில் தேசிய இளைஞர் திருவிழா
1 min read
National Youth Festival at the Government College in Kadayanallur
9.11.2026
தென்காசி மாவட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகம், எனது பாரதம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய தென்காசி மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் திருவிழா கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஆர்.பீர் முகமது தலைமையில் 5.11.2026 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ வெளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் முனிவர் ராம் சங்கர் முன்னிலை வகித்தார் முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் நாட்டுப்புற குழு நடனம், நாட்டுப்புற குழு பாடல், தெரு நாடகம், ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன போட்டிகளுக்கு நடுவர்களாக பேராசிரியர்கள் டேனியல் ராஜம்மாள் நினைவு கல்வியில் கல்லூரி பேராசிரியர் ஏஞ்சலினா, சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி பேராசிரியர் புனிதா, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மலர், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் ராம் சங்கர், முனைவர். ராஜேஷ் கண்ணா, முனைவர். குரு பிரசாத் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர். இக்கலை போட்டிகளில் புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, சங்கரன்கோவில் விவேகானந்தா கல்லூரி, சங்கரன்கோவில் அரசு கல்லூரி, ஆலங்குளம் மேல்நிலைப்பள்ளி, கடையநல்லூர் விஷ்டம் மெட்ரிக் பள்ளி, தென்காசி டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி, பாரத் கல்வியியல் கல்லூரி, யுஎஸ்பி கல்வியியல் கல்லூரி, நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தென்காசி மாவட்ட இளைஞர் அலுவலர் பொறுப்பு வகிக்கும் ஞானச்சந்திரன் அவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் மற்றும் ஆங்கிலத் துறை தலைவர் ராம்சங்கர் ஆகியோர் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவி சுபைதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜேஷ் கண்ணா அனைவருக்கும் நன்றி கூறினார். சிறப்பாக பங்கு பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தேசிய கலை திருவிழாவில் கலந்து கொள்வர். பின்னர் அங்கு தகுதி பெரும் மாணவ மாணவியர் டெல்லியில் நடைபெறும் தேசிய கலைத்திருவிழாவில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கலைத் திருவிழாவை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.