November 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பான்கார்டு அடையாளத்தை திருடி போலி நிறுவனம்- ஊழியருக்கு ரூ.9.2 கோடிக்கு வரி

1 min read


PAN card identity stolen to set up a fake company; employee faces tax liability of Rs 9.2 crore

11/11/2026
ஆண்டுக்கு ரூ.12.6 லட்சம் மட்டுமே சம்பாதிக்கும் டெல்லியைச் சேர்ந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர், தற்போது ரூ. 9.2 கோடி வருமானம் தொடர்பான வருமான வரித்துறை விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் அந்த ஊழியரின் PAN கார்டு மற்றும் KYC ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, டெல்லியில் இரண்டு போலியான GST பதிவுகளைப் பெற்றுள்ளனர். மேலும், அவரது பெயரில் வங்கிக் கணக்குகளையும் தொடங்கி போலி நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் மூலம் ரூ.6.5 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக GST கணக்குகளில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அவரது PAN எண்ணுடன் ரூ.9.2 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் தொடர்புபடுத்தப்பட்டு வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

தனக்கு எந்தவொரு நிறுவனமும் இல்லை என்றும், GST பதிவு செய்யவில்லை என்றும், இந்தப் பரிவர்த்தனைகள் மூலம் எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2019-20 நிதியாண்டில் தனது உண்மையான வருமானம் ரூ.12.6 லட்சம் என்றும், அதற்காக ரூ.1.4 லட்சம் TDS செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 3-ம் தேதி டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  • உங்கள் PAN எண்ணுடன் இணைக்கப்பட்ட GST பதிவுகளைச் சரிபார்க்கவும்.
  • வருமான வரித்துறை இணையதளத்தில் AIS மற்றும் Form 26AS விவரங்களைப் பார்வையிடவும்.
  • உங்கள் PAN மற்றும் KYC ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
  • அடையாளத் திருட்டு சந்தேகம் இருந்தால் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கவும்.
    இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *