சிவகிரி வட்டம் நெல் கட்டும் செவலில் மக்கள் தொடர்பு முகாம்- ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Public Outreach Camp at Nel Kattum Seval, Sivagiri Taluk
12.11.2026
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும்செவல் கிராமம் மாமன்னர் பூலித்தேவர் நினைவு திருமணமண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகாராணா வழங்கினார்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, தெரிவித்ததாவது ;-
அனைவருக்கும் வணக்கம். இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் மக்களை சந்தித்து மக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து அதை சரி செய்வது. அதனால் தான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, தெரிவித்தார்.
இம்முகாமில், வருவாய்த்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், 2 பயனாளிகளுக்கு நத்தம் கணினி பட்டாவிற்கான ஆணைகள். 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணைகளும், ஒரு பயனாளிக்கு வரன்முறைப் பட்டாவிற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் மூலம் 4 விவசாயிகளுக்கு மானியத்தில் தார்பாய், சூரிய மின்விளக்கு, மின்கல தெளிப்பான், பாரம்பரிய நெல்விதைகள் மற்றும் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு அம்மா மகப்பேறு மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து வழங்கினர்.முன்னதாக, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டனர்.
இம்முகாமில், கிள்ளிகுளம் மற்றும் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் அமைத்திருந்த வேளாண் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
இம்மக்கள் தொடர்பு முகாமில், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வேளாண்மை இணைஇயக்குநர் மீனாகுமாரி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜேந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) தென்காசி வடக்கு வி.சிவக்குமார். மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை, உதவி ஆணையர் (கலால்) சுப்பிரமணியன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.மதிவதனா, சிவகிரி வட்டாட்சியர் இரா.வெங்கடசேகர், தனிவட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) பழனிவேல் சாமி மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.