November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடி: பல்வேறு கட்டுமான பணிகளை கணிப்பாய்வு அலுவலர், ஆட்சியர் ஆய்வு

1 min read

Aaykudi: Monitoring officer and District Collector inspect various construction works

13.11.2026
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆய்க்குடி பேரூராட்சி அலுவலக கட்டிடம், ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு விருந்தினர் மாளிகை, ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிட பணிகள், ஆய்க்குடி பேரூராட்சி அனந்தபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டிடப் பணிகள்,
ஆய்க்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக கட்டிடம் கட்டும் பணி, ஆகிய கட்டுமான பணிகளை
தென்காசி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/ தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், நேற்று 13.11.2026 பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா,,மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர்.ஆ.ரா.சிவராமன், தென்காசி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுஷ்மா, ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ்வரி, ஆய்க்குடி பேரூராட்சி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *