November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது

1 min read


A new low-pressure area has formed in the Bay of Bengal.

13.11.2026
தென்கிழக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்தார்.
மத்திய அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி, இன்று (நவ.13) காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது நிலவுகிறது. இந்த அமைப்பு, வட மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவ.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அதன் பின், நவ.,16ல் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.
இந்த புயல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஷா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாவதால், இந்த புயல்களின் நகர்வு, வட மேற்கு நோக்கி செல்கிறது. தெற்கு அல்லது தென் மேற்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானால், அது புயலாக மாறும்போது, தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. உருவாகும் இடம் அடிப்படையிலேயே, இவற்றின் நகர்வு அமைகிறது.
வங்கக்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருப்பதால், தற்போது அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின்றன. வட கிழக்கு பருவமழை முடியும் வரை, தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளன.

தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *