தென்காசி மாவட்டத்தில் 1.57 லட்சம் மாணவர்கள், ஆசிரியர் களுக்கு கேக்
1 min read
Cakes for 1.57 lakh students and teachers in Tenkasi district
13.11.2026
2026-ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 1,57,135 பேருக்கு கேக் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று 13.11.2026 சென்னை நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கியதை தொடர்ந்து தென்காசி திருமதி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், தென்காசி,மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா,ஆகியோர் மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர்.ஆ.ரா.சிவராமன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களுக்கு உட்பட்ட 996 பள்ளிகளில் இந்த விநியோகம் நடைபெற்றது
இதன் பிரிவு வாரியான விவரம் பின்வருமாறு: தொடக்கக் கல்வித் துறை (DEE) – அரசுப் பள்ளிகள்: 362 பள்ளிகளைச் சேர்ந்த 18,701 மாணவர்கள், 1,230 ஆசிரியர்கள் மற்றும் 2 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 19,933 பேர். தொடக்கக் கல்வித் துறை (DEE) – அரசு உதவி பெறும் பள்ளிகள்: 482 பள்ளிகளைச் சேர்ந்த 40,143 மாணவர்கள், 2,013 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியர் அல்லாத பணியாளர் என மொத்தம் 42,157 பேர். பள்ளிக் கல்வித் துறை (DSE) – அரசுப் பள்ளிகள்: 80 பள்ளிகளைச் சேர்ந்த 43,530 மாணவர்கள், 1,967 ஆசிரியர்கள் மற்றும் 164 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 45,661 பேர். பள்ளிக் கல்வித் துறை (DSE) – அரசு உதவி பெறும் பள்ளிகள்: 72 பள்ளிகளைச் சேர்ந்த 47,915 மாணவர்கள், 1,349 ஆசிரியர்கள் மற்றும் 120 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 49,384 பேர். ஒட்டுமொத்தமாக, தென்காசி மாவட்டத்தில் 1,50,289 மாணவர்கள், 6,559 ஆசிரியர்கள் மற்றும் 287 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 1,57,135 நபர்களுக்கு குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேக்குகள் வழங்கப்பட்டது.