November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியரையில் யானை தாக்கி விவசாயி பலி; விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

1 min read

Farmer killed in elephant attack at Puliyarai; farmers’ association stages protest

13/11/2026
தென்காசி மாவட்டம் புளியரை
பகுதியில் கடந்த 9ஆம் தேதி புளியரை தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பையா காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் நடைபெற்று இதுவரை உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே, உயிரிழந்த விவசாயி சுப்பையா அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25,00,000 (இருபத்தைந்து லட்சம்) இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி புளியரையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.

மேலும், காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வு காணவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் உயிர் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் துயரங்களிலும் உரிமைப் போராட்டங்களிலும் என்றும் துணை நிற்கும் இயக்கமாகத் தனது பணியைத் தொடர்ந்து வருகிறது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் கண்ணன் தொடக்க உரையாற்றினார். சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி,
விவசாய சங்க தாலுகா செயலாளர் ராஜகோபால், ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அசோக் நிறைவுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

போராடுவோம் போராடுவோம் வெற்றி பெறும் வரை போராடுவோம்
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை குரல் கொடுப்போம்!
ரூ.25 லட்சம் இழப்பீட்டை உடனடியாக வழங்கிடுக!
உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடுக!
காட்டு யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண்க!
விவசாயிகளின் உயிரைகாப்போம்!
விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்போம்!
ஒன்றுபட்டுப் போராடுவோம்! என்று முழக்கமிட்டனர்.

முடிவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்த பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள், அனைத்து இயக்கத் தோழர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் அனைவரூக்கும் நன்றி
கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *