November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கள்ளக்குறிச்சி எம்.எல்.எ. விவகாரம்; மத்திய அரசுக்கு கலெக்டர் புகார்

1 min read
Seithi Saral featured Image

Kallakurichi MLA issue: Collector lodges complaint with the Central Government

13.11.2026
கள்ளக்குறிச்சி கலெக்டராக பணியாற்றி வருபவர் பத்மஜா. இவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மொபைல் போனில் சர்ச்சைக்குரிய, ‘மெசேஜ்’ அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்கு சென்று பிரச்னையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதை, அருள் விக்னேஷ், சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் மறுத்துள்ளனர். ஆனால், கலெக்டர் இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்கு முன், விழுப்புரம் கலெக்டரும், பத்மஜாவின் கணவருமான ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமை செயலர் சாய்குமாரை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளரும் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், தலைமை செயலாளருக்கு அளித்த புகார் விபரங்களை, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு, முறைப்படி கலெக்டர் பத்மஜா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதுகுறித்து தலைமை செயலாளரிடம் முதலில் புகார் அளிக்க வேண்டும். தலைமை செயலாளரின் வாயிலாக இந்த தகவல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புகாரின் நகலை, மத்திய அரசிற்கு, சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியும் அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, கலெக்டர் பத்மஜா அனுப்பி வைத்திருக்கலாம். மத்திய அரசிடம் இருந்து வரும் உத்தரவை பொறுத்து, வழக்குப்பதிவு செய்யப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *