சிவகாசி: ரூ.6,000 லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது
1 min read
Sivakasi: TASMAC official arrested for accepting a bribe of Rs 6,000
13/11/2026
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் மணி. இவர், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மகாராஜபுரம் டாஸ்மாக் கடைக்கு மாற்றலாகி பணிபுரிகிறார்.
இவர், சம்பளம் பெறுவதற்கு வருகை பதிவை அனுப்ப, சிவகாசி டாஸ்மாக் மேற்பார்வையாளர் அமல்ராஜ், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணி அளித்த புகாரில், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் மதியம், சிவகாசி ‘எலைட்’ டாஸ்மாக் கடையில் வைத்து, அமல்ராஜை கைது செய்தனர்.