தமிழகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம்- தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
Crop loan waiver scheme in Tamil Nadu – Information from Tenkasi District Collector
14.11.2026
தமிழ்நாடு அரசு 2026 பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மோனிகா ராணா கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சிசி1)த் துறை, நாள்: 06.11.2026-இன் படி, தமிழ்நாடு அரசு 2026 பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டத்தினை.
- தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான காலவரையறை 01052025 முதல் 28,022026 வரை என்பதிலிருந்து 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிப்பு.
- தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000/-வரை பயிர்க்கடன் தள்ளுபடி.
- 19.062026-க்கு முன்னர் கடன் தொகையை நிலுவையில் இருந்து முழுவதுமாக செலுத்திய விவசாயிகளுக்கு தள்ளுபடி.
- ரூ.10,000/- குறைந்த மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களால் பெறப்பட்டு, தள்ளுபடிக்குத் தகுதி பெறும் கடன்களுக்கு தள்ளுபடி.
- ஒரே விவசாயி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில் அல்லது ஒரே சங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்க் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி.
- ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பெற்ற பயிர்க் கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி.
என விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்காண் அரசாணையின் படி,
1 06.11.2026க்கு முன்னர் தவணை தவறி, பகுதித் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026க்குள் நிலுவையில் இருந்து நேர்முகத் தொகையாக 5.75,000/-அக்கடன்களுக்குரிய வட்டியை அரசே செலுத்தும். விடுவிக்கப்பட்டு,
- 07.11.2026 முதல் 30.11.2026 வரை தவணை தேதி வரும் கடன்கள், பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.112026-க்குள் நிலுவையில் வைத்து நேர்முகத் தொகையாக ரூ.75,000/-விடுவிக்கப்படும், அக்கடன்களுக்குரிய வட்டியை அரசே செலுத்த வேண்டும்.
- 30.11.2026-க்கு பிறகு தவணை காலம் வரும் கடன்கள், உரிய தவணை தேதிக்குள் நிலுவையின்றி நேர்காணல் செய்யும் விவசாயிகளுக்கு தள்ளுபடி தொகை விடுவிக்கப்பட்டு வட்டியின்றி கடன் கணக்கு நேர்காணல் செய்யப்படும்.
2026 பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதித் தள்ளுபடிக்குத் தகுதி பெறும் விவசாயிகள், வட்டியின்றி கடனை நேர்முகமாக இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் கடன்களை நேர்செய்திடுமாறு கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.