November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே கொலை முயற்சி வழக்கில் மூன்று பேர் கைது

1 min read

Three people arrested in an attempted murder case near Tenkasi

14.11.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குளம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று நபர்களை பாவூர்சத்திரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பூலாங்குளம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே முன்பிரோதத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட அருணாச்சலம் என்பவரது மகன் கடல்மணி என்ற கடற்கரை (வயது 52).
பாலகிருஷ்ணன் என்பவரது மகன் அருண் பாஸ்கர் (வயது 26).முருகன் என்பவரது மகன் காமராஜ் (வயது 26). ஆகியோரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *