November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலைக்கு பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு-தேவசம்போர்டு முடிவு

1 min read

Free insurance cover of Rs. 2 lakh for Sabarimala pilgrims

14.11.2026
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு வழங்க தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சபரிமலைக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன்களின்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு காப்பீட்டு வசதியை இலவசமாக வழங்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு பக்தருக்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஸ்பாட் புக்கிங் முறையில் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்களுக்கும் பொருந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், நேரடி முன்பதிவு மூலம் செல்லும் பக்தர்கள் என இரு தரப்பினரும் இந்தக் காப்பீட்டு வசதியை பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, காப்பீட்டுக்காக பக்தர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை தேவசம் போர்டே செலுத்த உள்ளது.

இதற்காக மொத்தம் ரூ.1.5 கோடி பிரீமியம் தொகையை தேவசம் போர்டு செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *