November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்- ராகுல் காந்தி புகழாரம்

1 min read

Jawaharlal Nehru’s Birthday – Rahul Gandhi’s Tributes

14.11.2026
இந்தியாவின் முதல் பிரதமரும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 14) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்.

சுதந்திரம் என்பது அவர்களின் இறுதி இலக்காக இருக்கவில்லை; நாட்டின் புதிய பயணத்தில் அது ஒரு மைல்கல்லாகவே இருந்தது. சுயராஜ்ஜியம் என்பது அதிகாரத்தைப் பற்றியது அல்ல; நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்பதும் பொறுப்பேற்பதும் தான்.

இந்தியா என்பது அவர்களுக்கு ஒரு தேடலாகவும், சிந்தனையாகவும் இருந்தது. பன்முகத்தன்மையை நாட்டின் பலமாகவும், ஜனநாயகத்தை நம்பிக்கையாகவும், சமத்துவத்தை அடித்தளமாகவும் அவர்கள் கருதினர்.

நவீனமான, அறிவியல் சிந்தனை கொண்ட, முற்போக்கான, தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு இன்றும் நமக்கு உத்வேகமாக உள்ளது. அத்தகைய இந்தியாவைக் கட்டமைக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்”.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *