திருக்கல்யாணம்; திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.2.55 லட்சத்திற்கு ஏலம்
1 min read
Divine Wedding: Coconut used to hold the *thirumangalyam* auctioned for Rs. 2.55 lakh
16/11/2026
தேனி மாவட்டம் போடியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், விழாவின் நிறைவாக திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு ஏலம் கேட்ட நிலையில், மதுரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குடும்பத்தினர் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர்.
இந்த தேங்காயை வீட்டில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவில் அறங்காவலர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், வெற்றி பெற்ற குடும்பத்தினருக்கு தேங்காய் மற்றும் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தேங்காய் ஏலம் விடும் நிகழ்ச்சியை கோவில் அறங்காவலர் முத்து ராஜ பாண்டிய செயல் அலுவலர் சுந்தரி மற்றும் இணை ஆணையர் ஆகியோர் பங்கேற்று நடத்தினர்.