November 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நகைக்கடையில் கொள்ளையடித்த இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி, தாயார் வீட்டில் போலீஸ் சோதனை

1 min read

Instagram celebrity Meenakshi, who committed a robbery at a jewellery store, faces a search at her mother’s house.

16.11.2026
மதுரை நகைக்கடை கொள்ளையுடன் தொடர்புடைய இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் அவருடைய தாயார் யின் வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் நகைக்கடையின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடைக்குள் கடந்த 12-ந்தேதி அதிகாலை புகுந்த வாலிபர், கடையில் இருந்து ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றிக்கொண்டு தனி ஒருவனாக முகமூடி, கையுறை அணிந்தவாறு வந்து நகைகளை கொள்ளையடித்த அந்த நபர், பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் மகனான யூடியூபர் நிஷாந்த் (வயது 25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளையில் நிஷாந்தின் காதலியும், மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி (வயது 23) என்பவருக்கும், நிஷாந்தின் தந்தை சுரேஷ்-க்கும் (வயது 50) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மீனாட்சி, சுரேசை போலீசார் கைது செய்தனர்.

மேலும், மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ தங்க, வைர நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த நிஷாந்தை தருமபுரி மாவட்டம் சேசம்பட்டி அருகே ஆம்னி பஸ்சில் வைத்து போலீசார் அதிரடியாக இன்று கைது செய்தனர். அவரை, மதுரைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 6 கிலோ வரை மீட்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளதால் எஞ்சிய நகைகளும் மீட்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் வீட்டில் காவல் துறையினர் இன்று சோதனை நடத்தினர். அதனுடன், திருப்பாலையில் உள்ள மீனாட்சியின் தாயாரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சிந்துவிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *