முதல் அமைச்சர் விஜயுடன், பிரியங்கா காந்தியின் வீட்டுப் பணிப்பெண் புகைப்படம் எடுத்துக் கொண்டார்
1 min read
Priyanka Gandhi’s domestic help took a photograph with Chief Minister Vijay.
17.11.2026
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் திங்கள் அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார்.
விழா மேடையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சூழ்ந்திருந்த வேளையில், சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி ஒரு பெண்ணை முதலமைச்சர் விஜய்யிடம் அழைத்து வந்தார்.
முதலமைச்சர் விஜய்யிடம் அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி, “இவர் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடைய வீட்டில் விசுவாசமாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை” என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் சற்றும் யோசிக்காமல் புன்னகையுடன் சம்மதித்த முதலமைச்சர் விஜய், அந்தப் பெண்ணை அருகில் அணைத்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல், “எப்படி இருக்கிறீர்கள்?” என்று அவரிடம் மிகுந்த அன்போடு நலம் விசாரித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது அமைச்சர் என்.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனும் உடனிருந்தார்.
தன் மனதில் 22 ஆண்டுகளாகச் சுமந்து வந்த நீண்ட நாள் ஆசை, சில நொடிகளில் நனவான மகிழ்ச்சியில் அந்தப் பெண் முதலமைச்சர் விஜய்க்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற மாபெரும் அரசியல் விழாவில், தன்னிடம் பணிபுரியும் பெண்ணின் ஆசையை நினைவில் வைத்துப் பிரியங்கா காந்தி அதை முதலமைச்சரிடம் கொண்டு சென்றதும், அதற்கு முதலமைச்சர் விஜய் காட்டிய எளிமையும் அங்கிருந்தோரை நெகிழ வைத்தது. தற்போது இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.