குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
1 min read
Iran attacks US military bases in Kuwait
18/11/2026
ஈரான்- அமெரிக்கா இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இந்த போர் அவ்வப்போது தற்காலிகமான நிறுத்தப்பட்டாலும் நிரந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சப்பட்டது. அதேவேளையில் அமரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
ஆனால், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிரம்ப் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஈரானின் கெஷ் தீவு மீது அமெரிக்காவும், பஹ்ரைனின் சிறிய தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரானும் தாக்கியதாக தகவல் வெளியானது.
இதனால் மேற்காசிய நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல் சலீம் விமானத் தளம் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளார்.
இதனால் குவைத்தில் உள்ள வான் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு சிஸ்டம், டிரோன் மற்றும் ஏவுகணைகள் ஏவும் பிளாட்பார்ம் ஆகியவை மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மத்திய கமாண்ட் இது குறித்து உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில் தொடர்ந்து கிரிமினல் தாக்குதல் நடத்துவதாக ஈரான் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.