தீபத்தூண் விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடு ஏன்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
1 min read
Why the differing stances on the ‘Deepa Thoon’ (lamp pillar) issue? Annamalai questions the Tamil Nadu government.
19.11.2026
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது நிலத்தை அளவிடும் கல்தூண் என்று தமிழக அரசின் முன்வைத்துள்ள வாதம் ஹிந்து மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசின் இந்த வாதம் குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது எக்ஸ் தளப்பதிவில்; கடந்தாண்டு டிசம்பரில், முந்தைய திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், சமணத் துறவிகள் விளக்கேற்றுவதற்காக வைத்த தூண் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது. நேற்று, தற்போதைய தவெக அரசும், உச்சநீதிமன்றத்தில் அந்தத் தீபத்தூணை மீண்டும் ஒரு நில அளவைக் கல் என்று குறிப்பிட்டுள்ளது.
இப்படி, ஒரு விவகாரத்தில் இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஒரு அரசாங்கத்தால் எப்படி முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுக்க முடியும்? இது, முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தற்போதைய தவெக அரசாக இருந்தாலும் சரி, இந்த விவகாரம் குறித்த தமிழக அரசின் புரிதலின்மையை காட்டுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.