தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிவு:15 பேர் டிஸ்மிஸ்
1 min read
Secrets regarding investments intended for Tamil Nadu leaked to Andhra Pradesh: 15 people dismissed
19/11/2026
தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. இது தொடர்பாக தவெக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், இதனை தமிழக அரசு மறுத்துள்ளது.
தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடு குறித்த ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு தொழில் முதலீடு ஆலோசனை வழங்கி வரும் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையில் பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 15 பேரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினர். அவர்களில் சிலர் அதிமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு திமுக ஆட்சியிலும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் பிரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல், பிரபாகரன் அண்டி ஆகியோர் மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்துள்ளனர். அதனை, சமூகஊடகத்திலும் பகிர்ந்துள்ளனர்.