November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min read

Collector advises farmers in Virudhunagar district to opt for crop insurance

20/11/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

2026-27 ஆம் ஆண்டில் ராபி சம்பா-II பயிர்களுக்கு தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் நில உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள விவசாயி அடையாள எண்ணும்(FID), குத்தகை விவசாயிகள் பதிவு செய்து கொள்ள நில உரிமைதாரர்களிடமிருந்து ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டதால், பேரூராட்சி, நகராட்சி, நகர்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மட்டும் மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களும் மற்றும் தனியார் கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளாலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தன.

இதைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க வேளாண்மை துறையின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு, ஒன்றிய அரசை நேரில் சந்தித்து, தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப இடர்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தது.

மேலும், குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகிளிலிருந்து உரிய விலக்கு அளிக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க, தகுதியுள்ள குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், ஒன்றிய அரசால் 2026-27 ஆம் ஆண்டிற்கு விவசாய அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகிளிலிருந்து உரிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *