வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாநில விருது- தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
State award for girl children who have performed acts of bravery – Information from Tenkasi Collector
20.11.2026
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாநில விருதானது வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ராணா கூறியிருப்பதாவது:-
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வீரதீர செயல்கள் புரிந்த பெண்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 2026-27ஆம் நிதியாண்டில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும். அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்ய வேண்டும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதி அடிப்படையில் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இவ்விருதிற்கு பின்வருமாறு தகுதியுடைய பெண் குழந்தைகளிடமிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும்.
- கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்
பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
பெண் குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் மற்றும் தவிர்த்தல்
வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல்
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல்
ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும், மேலும் விண்ணப்பித்த விவரங்களை தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் Verdana எழுத்துருவில் தட்டச்சு செய்து 2 நகல்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் (140/5 பி, ஸ்ரீசக்திநகர் தென்காசி 627811) சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.