November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மழை நீர் சேமிப்பு அமைப்பு கட்டாயம்

1 min read

Rainwater harvesting systems are mandatory in the Kadayanallur Municipality area

20.11.2026
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாத்திட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவின் படி நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாத்திட அனைத்து குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு புனரமைக்க அல்லது புதிதாக அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சித்ராசோனியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி பதிவு பெற்ற பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் மழைநீர் சேகரிப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர், நகரமைப்பு அலுவலர், மேலாளர், உதவிபொறியாளர் திட்டம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *