முக்கூடலில் புதிய சிமெண்ட் சாலையை பொதுமக்கள் திறந்து வைத்தனர்
1 min read
Members of the public inaugurated a new cement road in Mukkudal
20.11.2026
தென்காசி மாவட்டம், முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை பொதுமக்களே திறந்து வைத்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு காமராஜர் தெருவில், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சிந்துஜா முத்துச்சாமி முன்னிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புதிய சாலையைத் திறந்து வைத்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்துக் கொடுத்ததுடன், அந்தச் சாலையை பொதுமக்களையே திறந்து வைக்கச் செய்த இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.