November 23, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

1 min read


Public Grievance Redressal Meeting in Tenkasi

23.11.2026
தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.11.2026) மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 கோரிக்கை மனுக்களை பெற, மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவுறுத்தினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கடந்த திங்கட்கிழமை அன்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் தற்போதைய நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன் அவர்கள் தலைமையில் உலக கழிப்பறை தினம் 2026 ஐ முன்னிட்டு “தூய்மையான கழிப்பறை கண்ணியமான எதிர்காலம்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை, உதவி ஆணையர் கலால் திரு.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *