பரமக்குடியில் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் விழிப்புணர்வு பிரச்சாரம்
1 min read
Antimicrobial resistance awareness campaign in Paramakudi
23.11.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.பரமக்குடி காந்தி சிலை அருகில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மருந்து ஆய்வாளர்கள் பரமக்குடி பூமாதேவி, ராமநாதபுரம் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பின்பு மருந்து ஆய்வாளர் பூமாதேவி பேசுகையில், மருத்துவரின் பரிந்துரையின்றி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனளிக்காது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உரிய அளவில், குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நிலை சரியானவுடன் தன்னிச்சையாக மருந்துகளை நிறுத்தக்கூடாது.
மேலும், பிறருக்கு பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளை உட்கொள்வது, பழைய மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவது, கால்நடைகள் மற்றும் விவசாயத்தில் தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுதல், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளுதல், தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்துதல் போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், பரமக்குடி மொத்த மற்றும் சில்லரை விற்பனை மருந்து வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-குணாளன்,நிருபர்.