November 25, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ராமாயணம் சினிமா ரத்து-ரசிகர்கள் வாக்குவாதம்

1 min read

‘Ramayanam’ movie screening cancelled in Tenkasi; fans get into an argument

23.11.2026
தென்காசி பி.எஸ்.எஸ். திரையரங்கில் ராமாயணம் திரைப்படத்தின் இரவு காட்சி திடீர் ரத்து இதனால் – 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

தென்காசி நகரில் உள்ள பிரபலமான பி.எஸ்.எஸ். திரையரங்கில் நேற்று இரவு 10 மணிக் காட்சியில் ராமாயணம் திரைப்படம் திரையிடப்படாததால், 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராமாயணம் திரைப்படம் பார்ப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு, அனைவரும் திரையரங்கில் காத்திருந்தனர். இந்நிலையில், சுமார் 45 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராமாயணம் திரைப்படத்தைத் திரையிட முடியாது என நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், மற்றொரு திரையில் தனுஷ் நடித்த ஓம் திரைப்படம் திரையிடப்படுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள், தாங்கள் பணம் கொடுத்து ராமாயணம் திரைப்படம் பார்க்கவே வந்ததாகக் கூறி திரையரங்கு ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தென்காசி போலீசார், ரசிகர்களிடமும் திரையரங்கு நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கிடையே, திரையரங்கு நிர்வாகம் வேண்டுமென்றே ராமாயணம் திரைப்படக் காட்சியை ரத்து செய்ததாகவும், மற்றொரு திரைப்படத்திற்கு ரசிகர்கள் வருகை குறைவாக இருப்பதால், ராமாயணம் படத்திற்கு வந்த கூட்டத்தை அந்தப் படத்திற்கு திருப்பிவிட திட்டமிட்டு இவ்வாறு செய்ததாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தச் சம்பவத்தால் தென்காசி பிஎஸ்எஸ் திரையரங்கில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *