தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை: ஸ்தானீக பட்டர்கள்
1 min read
No comments offered regarding the lighting of a lamp on the deepasthoonam: Sthanika priests
25.11.2026
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை. கடந்த ஆண்டுகளை போல் உச்சிப் பிள்ளையார்கோவில் மண்டபத்தில் ஏற்றப்பட்டது.
இது குறித்து கோவில் அறங்காவலர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், கோவில் ஆவணங்கள், ஆகமசான்றுகள், கோவில் ஸ்தானீக பட்டர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபம் ஏற்ற தீர்மானம் செய்ததாக அறங்காவலர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள கோவில் ஸ்தானீக பட்டர்கள், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி / துணை ஆணையர், அறங்காவலர் குழுதலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:-
2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதம் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம். கோவிலில் நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் கோவிலுக்கு வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்தோம்
உச்சநீதிமன்ற உத்தரவுபடி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. அறங்காவலர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை ஆலோசிக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.